To sign my guestbook, you need to signin first. | |
muthukumaraismk Guestbook![]() தென்காசி:தென்காசியில் எம்.எல்.ஏ., சரத்குமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை. தென்காசி எம்.எல்.ஏ., சரத்குமார் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்ள தென்காசி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நகர தலைவி பானு, மற்றும் நகராட்சி கமிஷனர் முஜ்புர் ஆகியோருடன் சேர்ந்து தென்காசியில் உள்ள 8 மற்றும் 9வது வார்டு பகுதிகளில் திடீர் ஆய்வில் உடன் இருந்த நகர தலைவி மற்றும் நகராட்சி கமிஷனர் ஆகியோரிடம் அங்குள்ள குப்பைகளையும் வாறுகாலையும் உடனடியாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கும் படி கூறினார். மேலும் அங்குள்ள மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார். மேலும் அப்பகுதியில்உள்ள அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளையும் பார்வையிட்டார். மேலும் அப்பகுதி மக்கள் வாட்டர் டேங்க் அருகிலேயே ரேஷன் கடை அமைக்க வேண்டும் எனவும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என எம்எல்ஏ விடம் கோரிக்கை விடுத்தனர். | |